தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/பாலாற்று முகத்துவாரத்தில் மீன்படி துறைமுகம் அமையுமா? எதிர்பார்ப்பு!

பாலாற்று முகத்துவாரத்தில் மீன்படி துறைமுகம் அமையுமா? எதிர்பார்ப்பு!

பாலாற்று முகத்துவாரத்தில் மீன்படி துறைமுகம் அமையுமா? எதிர்பார்ப்பு!


UPDATED : ஜூலை 07, 2026 08:28 PM

ADDED : ஜூலை 07, 2026 06:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 07, 2026 08:28 PM ADDED : ஜூலை 07, 2026 06:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாமல்லபுரம்: வாயலுார் பாலாற்று முகத்துவார மணல்மேடை துார்வாரி ஆழப்படுத்தி, சிறிய மீன்பிடி துறைமுகம் ஏற்படுத்தி, மீன்பிடி தொழில் மேம்பாட்டிற்கு வழி வகுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் தோன்றிய பாலாறு, தமிழகம் வழியாக கடந்து, கல்பாக்கம் அடுத்த, வாயலுார் -- கடலுார் இடையே, வங்க கடலில் கலக்கிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், ஆற்றின் முகத்துவார பகுதி, ஆழத்துடன், இயல்பு தன்மையுடன் இருந்தது. ஆற்று நன்னீர் கடலிலும், கடலின் உவர்ப்புநீர், ஆற்றிலும் கலந்தது.

முகத்துவார பகுதியில், வெவ்வேறு நீரின் கலப்பு தன்மை, மீன்களுக்கு ஏற்றதாக இருந்தது. மீன்கள் குவிந்து ஏற்படும் இனப்பெருக்கத்தால், மீன்வளம் அதிகரித்தது. உய்யாலிகுப்பம், கடலுார் மீனவர்கள், கடலுக்கு செல்ல இயலாதபோது, ஆற்றில் மீன் பிடித்து, வருவாய் ஈட்டினர்.

கடந்த 2004ல் சுனாமி அலை தாக்கியபோது, மணல் குவிந்து ஏற்பட்ட மேடால், முகத்துவாரம் துார்ந்தது. நாளடைவில், ஆற்றில் கடல்நீர் ஊடுருவி, நிலத்தடிநீர் மாசடைந்தது. இதற்கிடையே, ஆற்றுநீரை தேக்கவும், ஆற்றில் கடல்நீர் ஊடுருவதை தடுக்கவும் கருதி, கடந்த 2019ல், நீர்செறிவூட்டல் தடுப்பணை அமைக்கப்பட்டது.

அணை உருவானதையடுத்து, கடல்நீர் ஆற்றில் ஊடுருவது முற்றிலும் தடைபட்டுள்ளது. 1 டி.எம்.சி., அளவிற்கு மழைநீரும் தேங்கி, குடிநீர், விவசாய நீராதாரமாக பயன்படுகிறது. இது ஒருபுறமிருக்க, முகத்துவார மணல்மேடால், ஆற்று நன்னீர் கடலிலும், கடலின் உவர்ப்புநீர் கடலிலும் கலக்காமல், 20 ஆண்டுகளாக தடைபட்டுள்ளது.

கனமழை வெள்ளப்பெருக்கின்போது, தடுப்பணை நிரம்பி வெளியேறும் உபரிநீர் கடலில் கலக்கிறது. பெருவெள்ளத்தை கடல் உள்வாங்க இயலாமல், ஆற்றுவெள்ளம் பகிங்ஹாம் கால்வாய் வழியாக, உய்யாலிகுப்பம், புதுப்பட்டினம், கடலுார் வசிப்பிட பகுதிகளில் உட்புகுகிறது.

முகத்துவாரத்தை அடைத்துள்ள மணல்மேடை அகற்றி ஆழப்படுத்தி, சிறிய மீன்பிடி துறைமுகம் அமைத்தால், சதுரங்கப்பட்டினம் -

பரமன்கேணி பகுதி மீனவர்கள் பயன்பெறுவர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:

நாங்கள் வருடத்தில் ஒன்பது மாதங்கள் தான் மீன் பிடிக்கிறோம். மீன்பிடி தடை, புயல், மழை ஆகிய காலங்களில், மூன்று மாதங்கள் தொழில் செய்ய முடியாது. கடலரிப்பால், மீன்பிடி படகுகள், வலைகள் ஆகியவற்றை, பாதுகாக்க இடமும் இல்லை.

சுனாமிக்கு முன், முகத்துவாரத்தில் கடல்நீர், ஆற்றுநீர் கலந்து, அதிகளவில் மீன் கிடைக்கும். சுனாமிக்கு பின், முகத்துவாரம் மணல் மேடாகி விட்டது. மணலை துார்வாரினால், பழைய நிலைமை திரும்பி, மீன்வளம் அதிகரிக்கும்.

படகுகளை கரையில் நிறுத்தாமல், கடலுக்குள் நிறுத்த, சிறிய மீன்பிடி துறைமுகமும் தேவை. ஆழ்கடலுக்கு செல்லும் படகில் சென்று, மீன் பிடிக்க ஆர்வம் இருந்தாலும், அதை நிறுத்த துறைமுகம் இல்லை. மீன்படி துறைமுகம் ஏற்படுத்தினால், தொழில் வளர்ச்சி ஏற்படும்.

இயந்திரம் மூலம் துார்வாரி, துறைமுகம் அமைக்க கோரி, பல ஆண்டுகளாக அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us