/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முதல்வர் கோப்பை விளையாட்டு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு
/
முதல்வர் கோப்பை விளையாட்டு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு
முதல்வர் கோப்பை விளையாட்டு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு
முதல்வர் கோப்பை விளையாட்டு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு
ADDED : ஆக 19, 2025 12:20 AM
செங்கல்பட்டு நடப்பாண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் செங்கல்பட்டு மாவட்ட வீரர்களுக்கு, விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நடப்பு ஆண்டிற்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் பள்ளி, கல்லுாரி, மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் ஆகிய ஐந்து பிரிவின் கீழ் நடைபெற உள்ளன.
மாவட்ட மற்றும் மண்டல அளவில் நடைபெறும் இப்போட்டிகள், வரும் 25ல் துவங்கி, செப்., 10ம் தேதி நிறைவடைகின்றன.
இப்போட்டிகளில், செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் பங்கேற்க விரும்பும் வீரர்கள், www.cmtrophy.sdat.in அல்லது www.sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக, உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான முன்பதிவு, கடந்த ஜூலை 14ம் தேதி துவங்கி கடந்த 16ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், மாவட்டம் முழுதும், அனைத்து பிரிவிலும், 10 லட்சம் போட்டியாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், நாளை 20ம் தேதி, இரவு 8:00 மணி வரை, முன்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு 74017 03461 அல்லது 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.