/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொசு ஒழிப்பு பணியாளர்கள் 70 பேருக்கு பணி நீட்டிப்பு
/
கொசு ஒழிப்பு பணியாளர்கள் 70 பேருக்கு பணி நீட்டிப்பு
கொசு ஒழிப்பு பணியாளர்கள் 70 பேருக்கு பணி நீட்டிப்பு
கொசு ஒழிப்பு பணியாளர்கள் 70 பேருக்கு பணி நீட்டிப்பு
ADDED : நவ 13, 2025 10:00 PM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சியில், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க, கொசு ஒழிப்பு பணியாளர்கள் 70 பேருக்கு, பணி நீட்டிப்பு வழங்க, நகராட்சி அனுமதி வழங்கி உள்ளது.
செங்கல்பட்டு நகராட்சியில், 33 வார்டுகளில் 17,514 வீடுகளில், 70,056 மக்கள் வசித்து வருகின்றனர். முதல்நிலை நகராட்சியாக உள்ள நிலையில், தற்போது நகரமயமாக்குதலின் விளைவாக, வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
செங்கல்பட்டு நகரில், டெங்கு காய்ச்சல் பரவாமல், டெங்கு கொசு புழுக்கள் உருவாகாமல் தடுக்க, கொசு ஒழிப்பு பணியாளர்கள் 70 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் கொசு ஒழிப்பு, வீடுகளுக்குச் சென்று காய்ச்சல் கணக்கெடுப்பு நடத்துதல் மற்றும் சுகாதார விழிப்புணர்வு உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.
இதனால் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மூன்று மாதங்களுக்கு, கொசு ஒழிப்பு பணியாளர்கள் 70 பேருக்கும் மீண்டும் பணி நீட்டிப்பு வழங்கவும், இப்பணிக்கு 42 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தும் தீர்மானம் நிறைவேற்றி, நகராட்சி ஒப்புதல் அளித்துள்ளது.

