/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கத்தியை காட்டி டிரைவரிடம் பணம் பறிப்பு
/
கத்தியை காட்டி டிரைவரிடம் பணம் பறிப்பு
ADDED : அக் 17, 2024 10:43 PM
மறைமலை நகர்:தென்காசி மாவட்டம், கடையநல்லுார் அடுத்த புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் விஷ்ணுதேவா, 40. லாரி டிரைவரான இவர், நேற்று அரியலுாரில் இருந்து சென்னைக்கு, சிமென்ட் லோடு ஏற்றிக்கொண்டு வந்தார்.
செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பு அருகில், லாரியை நிறுத்தி விட்டு துாங்கிக் கொண்டு இருந்தார்.
அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், கத்தியை காட்டி மிரட்டி, விஷ்ணுதேவாவிடம் இருந்த மொபைல் போன் மற்றும் 1,000 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர்.
இது குறித்து, விஷ்ணுதேவா செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.