sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்

/

 தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்

 தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்

 தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்


ADDED : ஜன 28, 2026 06:47 AM

Google News

ADDED : ஜன 28, 2026 06:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்: மறைமலை நகர் அண்ணா சாலையில், 'விர்கோ பாலிமர் இந்தியா லிமிடெட்' என்ற பாலித்தீன் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இதில் 90 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 600க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊதிய பிரச்னை மற்றும் நஷ்டம் என காரணம் கூறி, 9 மாதங்களுக்கு முன் இந்த நிறுவனம் மூடப்பட்டது.

இந்நிலையில் நேற்று, தொழிற்சாலையில் உள்ள இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல, இரண்டு லாரிகள் வந்துள்ளன.

இதையறிந்த 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தொழிற்சாலை நுழைவாயில் பகுதியை மறித்து, லாரிகளை சிறை பிடித்தனர்.

தங்களுக்கு 'செட்டில்மென்ட்' வழங்கிய பிறகே பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சு நடத்தினர்.

ஆனாலும், தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, எட்டு பெண்கள் உட்பட 65 பேரை போலீசார் கைது செய்து, அண்ணா சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அதன் பின், மதியம் தொழிலாளர்களை விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us