தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ விபத்து ஏற்படுத்தும் வகையில் விழுந்து கிடக்கும் இரும்பு துாண்

 விபத்து ஏற்படுத்தும் வகையில் விழுந்து கிடக்கும் இரும்பு துாண்

 விபத்து ஏற்படுத்தும் வகையில் விழுந்து கிடக்கும் இரும்பு துாண்


ADDED : நவ 30, 2025 12:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 12:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மறைமலை நகர், நவ. 30-

பரனுார் - ஜி.எஸ்.டி., சாலை அருகில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இரும்பு துாணை அகற்ற வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலையில், பரனுார் வட்டார போக்குவரத்து அலுவலக சந்திப்பு அருகே, ஜி.எஸ்.டி., சாலை குறுக்கே வாகன ஓட்டிகளுக்காக வழிகாட்டி பலகை அமைக்கப்பட்டது.

கடந்த வாரம், இந்த சாலையில் சென்ற டாரஸ் லாரி, வழிகாட்டி பலகை மீது மோதியது.

இதில், இரும்புத்துாண் உடைந்து விழுந்துள்ளது. அத்துடன், ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து டாக்கா நகர் செல்லும் முக்கிய தெருவின் நடுவே, விபத்து ஏற்படுத்தும் வகையில் விழுந்துள்ளதால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த இரும்புத்துாணை அகற்ற, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us