/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மணிலா பயிர் விதைப்பு பணியில் விவசாயிகள் ஆர்வம்
/
மணிலா பயிர் விதைப்பு பணியில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஜன 05, 2025 07:58 PM
செய்யூர்:செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்குட்பட்ட, லத்துார் மற்றும் சித்தாமூர் ஒன்றியத்தில் 84 ஊராட்சிகள் உள்ளன. சுமார் 30,000 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்தைக் கொண்டுள்ளது. விவசாயமே இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாகும்.
ஏரி, ஆறு, குளம், கிணறு, ஆழ்துளை கிணறு போன்ற நீர் ஆதாரங்கள் மூலமாக நெல், மணிலா, கரும்பு, எள், உளுந்து, தர்பூசணி ஆகியவை பருவத்திற்கு ஏற்றது போல பயிரிடப்படுகிறது.
இப்பகுதியில் அதிகபடியாக சம்பா பருவத்தில் நெற்பயிர் விவசாயம் செய்யப்படுகிறது. அடுத்த படியாக மணிலா மற்றும் தர்பூசணி விவசாயம் செய்யப்படும்.
ஆண்டுதோறும் செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மணிலா பயிரிடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டும் மணிலா பயிரிடும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டிவரும் நிலையில், பாசன கால்வாய் சீரமைத்தல், எருவு இடுதல், ஏர் ஓட்டுதல், பயிர் விதைத்தல் போன்ற பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

