/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பள்ளம்பாக்கம் ஏரி கலங்கல் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
/
பள்ளம்பாக்கம் ஏரி கலங்கல் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
பள்ளம்பாக்கம் ஏரி கலங்கல் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
பள்ளம்பாக்கம் ஏரி கலங்கல் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜூன் 15, 2025 01:54 AM

சூணாம்பேடு:சேதமடைந்த பள்ளம்பாக்கம் ஏரி கலங்கல் பகுதியை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூணாம்பேடு அடுத்த பள்ளம்பாக்கம் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது.
இந்த ஏரியின் மூலமாக 200 ஏக்கர் பரப்பளவு வயல்வெளி நீர்ப்பாசனம் பெறுகிறது. ஏரியின் கலங்கல் பகுதி பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளது. கடந்த ஆண்டு பருவமழையின்போது கலங்கல் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு ஏரியில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறியது. இதனால் தற்போது ஏரியில் போதிய தண்ணீர் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது.
துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள கலங்கல் பகுதியை பருவமழைக்கு முன் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.