/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விவசாயிகள் கொடை நிதி தன்னிறைவு முகாம்
/
விவசாயிகள் கொடை நிதி தன்னிறைவு முகாம்
ADDED : மே 15, 2025 09:18 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த செம்பூண்டி ஊராட்சியில், பாரத பிரதம மந்திரியின் விவசாயிகள் கொடை நிதி தன்னிறைவு முகாம், நேற்று நடந்தது.
பாரத பிரதம மந்திரியின் விவசாயிகள் கொடை நிதி திட்டத்தில், விவசாயிகளுக்கு காலாண்டுக்கு, 2,000 ரூபாய் வீதம் மூன்று தவணையாக, ஓராண்டிற்கு 6,000 ரூபாய், விவசாய இடுபொருட்கள் வாங்குவதற்காக, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் விதத்தில், வேளாண்மை உழவர் நலத்துறையால், அனைத்து கிராமங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, அச்சிறுபாக்கம் வேளாண்மை உதவி இயக்குநர் சிவராணி கூறியதாவது:
25 சென்ட் நிலம் உள்ள அனைத்து விவசாயிகளும், இதில் பயன் பெறலாம். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பயன் பெற தகுதியானவர்.
அரசு அலுவலர்கள், குடும்பத்தில் யாரேனும் ஒருவர் அரசு பணியில் இருந்தாலும், இத்திட்டத்தில் பயன் பெற இயலாது.
2019ம் ஆண்டு பிப்., மாதத்திற்கு முன் நிலம் உரிமையானதாக இருக்க வேண்டும்.
நிலம் வாங்கி, 5 ஆண்டுகள் முடிவுற்று இருக்க வேண்டும்.
வருமான வரி கட்டுபவர்கள், பொறியாளர்கள், தணிக்கையாளர்கள் இத்திட்டத்தில் பயன் பெற இயலாது.
தகுதி உடைய விவசாய பெருமக்கள் அனைவரும், இத்திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.