/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'பம்ப் செட்' கட்டுப்படுத்தும் கருவி வாங்க விவசாயிகளுக்கு அழைப்பு
/
'பம்ப் செட்' கட்டுப்படுத்தும் கருவி வாங்க விவசாயிகளுக்கு அழைப்பு
'பம்ப் செட்' கட்டுப்படுத்தும் கருவி வாங்க விவசாயிகளுக்கு அழைப்பு
'பம்ப் செட்' கட்டுப்படுத்தும் கருவி வாங்க விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : டிச 06, 2024 09:57 PM
செங்கல்பட்டு:வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வழங்கப்படும், மொபைல்போனால் இயங்கும் 'பம்ப் செட்' கட்டுப்படுத்தும் கருவி வாங்க, விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில், விவசாய நிலங்களில் உள்ள 'பம்ப் செட்'களை இயக்கச் செல்கின்றனர்.
அப்போது பாம்பு, விஷப்பூச்சி உள்ளிட்டவை கடித்து பாதிப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க, விவசாயிகள் வீடுகளில் இருந்தபடியே பம்ப் செட்களை இயக்கும் கருவி, மானியத்தில் வழங்கப்படுகிறது.
இதன் வாயிலாக, விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே, மொபைல்போன் வாயிலாக அவற்றை இயக்கவும், கண்காணித்து நிறுத்தவும் முடியும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகளை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு, 90030 90440 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.