/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல் கொள்முதல் செய்ததற்கு பணம் வழங்க விவசாயிகள் மனு
/
நெல் கொள்முதல் செய்ததற்கு பணம் வழங்க விவசாயிகள் மனு
நெல் கொள்முதல் செய்ததற்கு பணம் வழங்க விவசாயிகள் மனு
நெல் கொள்முதல் செய்ததற்கு பணம் வழங்க விவசாயிகள் மனு
ADDED : ஜூன் 30, 2025 11:28 PM

செங்கல்பட்டு, மத்திய அரசின் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நடத்திய கொள்முதல் நிலையத்தில், நெல் விற்பனை செய்த விவசாயிகள், பணம் கேட்டு நேற்று, கூடுதல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நலன் காக்கும் கூட்டம், கூடுதல் கலெக்டர் நாராயண சர்மா தலைமையில் நேற்று நடந்தது.
சப் - கலெக்டர் மாலதி ெஹலன், மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வீன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 385 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூடுதல் கலெக்டர் நாராயண சர்மா உத்தரவிட்டார்.
விவசாயிகள், கூடுதல் கலெக்டரிடம் அளித்த மனு:
ரெட்டிக்குப்பம், பாண்டூர் உள்ளிட்ட 20 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், மத்திய அரசின் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நடத்திய கொள்முதல் நிலையத்தில், நெல் விற்பனை செய்து, மூன்று மாதங்கள் ஆகின்றன.
ஆனால், விவசாயிகளுக்கு பணம் வழங்காததால், வங்கியில் வாங்கிய கடனுக்கு பணம் செலுத்த முடியவில்லை. இதனால், பணத்தை விரைந்து வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், கலெக்டர் அலுவலகம் அருகில், தொடர் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவின் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கூடுதல் கலெக்டர் உத்தரவிட்டார்.