/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலப் பணி நிறைவு விவசாயிகள் மகிழ்ச்சி
/
பாலப் பணி நிறைவு விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : நவ 08, 2024 01:23 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டது, சிறுதாமூர் ஊராட்சி. இங்கு, விவசாயமே பிரதான தொழில். முருங்கையில் இருந்து சிறுதாமூர் செல்லும் சாலையோரம் சிறுதாமூர் சுடுகாடு அமைந்துள்ளது.
இந்த சுடுகாட்டு பகுதியில் நிலப்பகுதியில் இருந்து முன்னக்குளம் ஏரிக்கு தண்ணீர் செல்வதற்காக சிறிய ஓடை உள்ளது. இந்த ஓடை பகுதியில், மழைக்காலங்களில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் நெல் அறுவடை இயந்திரங்களை கொண்டு செல்ல விவசாயிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
இப்பகுதியில், சிறிய பாலம் அமைக்க கோரி ஊராட்சி நிர்வாகத்தினர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தனர்.
இந்நிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ், 2024 -- 25ம் நிதியாண்டில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், 10.39 லட்சம் ரூபாய் மதிப்பிட்டில் புதிதாக பாலம் கட்டப்பட்டது.
இப்பகுதி விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள், பாலம் அமைக்கப்பட்டதால், நிரந்தர தீர்வு ஏற்பட்டுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

