/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கழனிப்பாக்கம் கொள்முதல் நிலையத்தில் இரவில் வியாபாரிகளின் நெல் கொள்முதல் விவசாயிகள் வேதனை
/
கழனிப்பாக்கம் கொள்முதல் நிலையத்தில் இரவில் வியாபாரிகளின் நெல் கொள்முதல் விவசாயிகள் வேதனை
கழனிப்பாக்கம் கொள்முதல் நிலையத்தில் இரவில் வியாபாரிகளின் நெல் கொள்முதல் விவசாயிகள் வேதனை
கழனிப்பாக்கம் கொள்முதல் நிலையத்தில் இரவில் வியாபாரிகளின் நெல் கொள்முதல் விவசாயிகள் வேதனை
ADDED : ஜூன் 20, 2025 11:43 PM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியம், கூடலுார் ஊராட்சிக்கு உட்பட்ட கழனிப்பாக்கத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், வியாபாரிகளின் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு, மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஆகியவற்றின் வாயிலாக, 130க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
இதில், மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு பணம் வழங்காததால், விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இதனால், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டுக்குள் நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு, தற்போது அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது.
அத்துடன், மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வந்த பகுதிகளை தற்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினர் கையகப்படுத்தி, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்து வருகின்றனர்.
அவ்வாறு, கூடலுார் ஊராட்சிக்கு உட்பட்ட கழனிப்பக்கம் பகுதியில், கடந்த நான்கு நாட்களுக்கு முன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் வாயிலாக, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, தனியார் வியாபாரிகளின் நெல் மூட்டைகள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு, கொள்முதல் செய்யப்படுவதாக, சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது.
இதையடுத்து நேற்று, தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள், இந்த கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தனர்.