/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தெரு நாய்கள் தொல்லையால் கோவிலம்பாக்கத்தில் அச்சம்
/
தெரு நாய்கள் தொல்லையால் கோவிலம்பாக்கத்தில் அச்சம்
ADDED : மே 12, 2025 12:27 AM
கோவிலம்பாக்கம்:கோவிலம்பாக்கத்தில் உள்ள பிரதான சாலை, போக்குவரத்து நிறைந்தது. மேடவாக்கம், வடக்குபட்டு, நன்மங்கலம் பகுதி மக்கள் வேளச்சேரி, விஜயநகர் செல்வதற்கு இச்சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த சாலையில், 40க்கும் மேற்பட்ட தெருநாய்கள் தஞ்சமடைந்துள்ளன.
சாலையில் உணவு தேடி திரியும் அவை, வாகன ஓட்டிகளை துரத்துவதால் விபத்துகளை சந்திக்கின்றனர்.
தற்போது, கோடை விடுமுறை என்பதால் மாணவ - மாணவியர் சாலையில் விளையாடுவது வழக்கம். அவர்களை நாய்கள் துரத்துவதால் பீதியடைந்து வருகின்றனர். இரவு நேரத்தில் நாய்கள் பல மணிநேரம் குரைத்து, சண்டையிடுவதால் பல குடும்பத்தினர் துாக்கமிழக்கின்றனர்.
பலமாதங்களாக இருக்கும் இப்பிரச்னைக்கு, சம்பந்தப்பட்ட ஊராட்சியினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.