/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் ஓய்வெடுக்கும் கால்நடைகளால் அச்சம்
/
சாலையில் ஓய்வெடுக்கும் கால்நடைகளால் அச்சம்
ADDED : அக் 21, 2025 11:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்: புதுப்பட்டு பகுதி சாலையில் ஓய்வெடுக்கும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர் .
மதுராந்தகத்தில் இருந்து கக்கிலபேட்டை, புழுதிவாக்கம் வழியாக உத்திரமேரூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
புதுப்பட்டு பகுதியில் கால்நடைகள், சாலையில் படுத்து ஓய்வெடுக்கின்றன.
இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, மாநில நெடுஞ்சாலைத் துறையினர், கால்நடைகளை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.