/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாழப்பட்டு சாலையில் அபாய பள்ளங்களால் பீதி
/
வாழப்பட்டு சாலையில் அபாய பள்ளங்களால் பீதி
ADDED : அக் 22, 2025 10:56 PM

செ ய்யூர் அடுத்த வாழப்பட்டு கிராமத்தில் நல்லுார் - வில்லிப்பாக்கம் இடையே செல்லும், மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இரும்பேடு, ஜமீன்புதுார், சித்தார்க்காடு, நாங்களத்துார் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமத்தினர், இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், மாமல்லபுரம்-- புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையை, நான்கு வழியாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது.
பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏரிகளில், அரசு அனுமதியுடன் லாரிகளில் மண் கொண்டுவரப்பட்டு, சாலை உயர்த்தி அமைக்கப்பட்டு வருகிறது.
வாழப்பட்டு ஏரியில் இருந்து கடந்த இரண்டு மாதங்களாக அதிக பாரம் ஏற்றிக்கொண்டு, தினமும் ஏராளமான லாரிகள் சென்றதால், ஏரி பகுதியில் 100 மீட்டர் துாரத்திற்கு, மாநில நெடுஞ்சாலை சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன.
இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் சிக்கி தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.
மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பி.சுரேஷ், செய்யூர்.

