/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதுப்பேட்டை கிராம பகுதியில் விஷ குளவிக்கூடால் அச்சம்
/
புதுப்பேட்டை கிராம பகுதியில் விஷ குளவிக்கூடால் அச்சம்
புதுப்பேட்டை கிராம பகுதியில் விஷ குளவிக்கூடால் அச்சம்
புதுப்பேட்டை கிராம பகுதியில் விஷ குளவிக்கூடால் அச்சம்
ADDED : அக் 03, 2024 12:48 AM

சித்தாமூர்:சித்தாமூர் அருகே சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பேட்டை கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கிராமத்தின் குடியிருப்பு பகுதியில், அருகே உள்ள தென்னை மரத்தின் கீற்றில், கடந்த மூன்று மாதங்களாக விஷ குளவி கூடு கட்டி உள்ளது. குளவிகள் தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் பறப்பதால், அப்பகுதிவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன், இப்பகுதியில் விஷ குளவி கொட்டி, ஒருவர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பலத்த காற்று வீசினால், கீற்று கீழே விழுந்து குளவி கூடு கலையும் அபாயம் உள்ளது.
குளவி கூடு கலைந்தால், விஷக் குளவிகளால் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் அனைவரும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, குடியிருப்புப் பகுதியில் உள்ள விஷக் குளவிக்கூட்டை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

