/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடியிருப்பில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் அச்சம்
/
குடியிருப்பில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் அச்சம்
குடியிருப்பில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் அச்சம்
குடியிருப்பில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் அச்சம்
ADDED : ஜூன் 05, 2025 01:50 AM

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சி, சத்யா நகர் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு, சிங்கபெருமாள் கோவில் மின் வாரிய அலுவலகத்தில் இருந்து, மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த பகுதியில் உள்ள வீடுகளை ஒட்டியும், வீடுகளின் மேல் தளங்களில் தாழ்வாகவும், உயர் அழுத்த மின்வடங்கள் செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
பல ஆண்டுகளாக இந்த பகுதியில் ஆபத்தான மின் வடங்கள் செல்கின்றன. இதன் காரணமாக, வீட்டின் மேல் தளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதால், மின் விபத்து ஏற்படுமோ என்ற அச்ச உணர்வுடன் குழந்தைகளுடன் வாழும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
மின்வடங்களை மாற்றியமைக்க கோரி பலமுறை புகார் மனு அளித்தும், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, மின்வடங்களை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.