/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அந்தியோதயா அன்னயோஜனா திட்டம் ஜூன் 31க்குள் கைரேகை பதிய வேண்டும்
/
அந்தியோதயா அன்னயோஜனா திட்டம் ஜூன் 31க்குள் கைரேகை பதிய வேண்டும்
அந்தியோதயா அன்னயோஜனா திட்டம் ஜூன் 31க்குள் கைரேகை பதிய வேண்டும்
அந்தியோதயா அன்னயோஜனா திட்டம் ஜூன் 31க்குள் கைரேகை பதிய வேண்டும்
ADDED : மே 12, 2025 11:42 PM
செங்கல்பட்டு, அந்தியோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை வீட்டு ரேஷன் அட்டைகள் உள்ளோர் அனைவரும், ரேஷன் கடைக்குச் சென்று, வரும் ஜூன் 31ம் தேதிக்குள் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்ட ரேஷன் கடைகளில், பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை வீட்டு ரேஷன் அட்டைகள் வாயிலாக, இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், வரும் ஜூன் 31ம் தேதிக்குள், ரேஷன் கடைகளுக்குச் சென்று, கைரேகை பதிவு செய்து பயன் பெறலாம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அந்தியோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை வீட்டு ரேஷன் அட்டைகள் உள்ள, 6 லட்சத்து 99 ஆயிரத்து 44 பேரில், 5 லட்சத்து, 85 ஆயிரத்து 379 பேர் பதிவு செய்துள்ளனர்.
மற்றவர்கள், வரும் ஜூன் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.