/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தீயணைப்பு விழிப்புணர்வு ஒத்திகை
/
தீயணைப்பு விழிப்புணர்வு ஒத்திகை
ADDED : நவ 21, 2024 08:09 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில், நேற்று காலை வருவாய் மற்றும் தீயணைப்பு துறை சார்பில், பேரிடர் மற்றும் தீ விபத்து காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என, ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தீயணைப்பு துறையின் உதவி மாவட்ட அலுவலர் செந்தில்குமரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுக்கு முதலுதவி அளித்தல், பேரிடர் காலங்களில் தற்காத்துக் கொள்ளுதல், துரிதமாக செயல்படுதல், மீட்பு நடவடிக்கைகள், தீ அணைக்கும் முறைகள் குறித்து, தீயணைப்பு வீரர்களால் செயல்முறைகளாக விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.