நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:தீயணைப்புத் துறை சார்பில் தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு திருப்போரூர் அடுத்த காலவாக்கம் எஸ்.எஸ்.என்., பொறியியல் கல்லுாரி வளாகத்தில் தீ தடுப்பு விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், திருப்போரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் துரைராஜ் தலைமையிலான வீரர்கள் பங்கேற்று தீயை கட்டுப்படுத்தும் நடைமுறைகள் குறித்து கட்டுமான தொழிலாளர்களிடையே விழிப்புணர்வு அளித்தனர்.
மேலும், கேஸ் சிலிண்டர் கசிந்தால் கட்டுப்படுத்தும் முறை, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை காப்பாற்றுதல், தீ விபத்து ஏற்பட்ட இடங்களில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

