ADDED : மார் 11, 2026 05:16 AM

மறைமலை நகர்: செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் சார்பில் தீ விபத்து ஏற்படும் போது மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை பயிற்சி நேற்று நடந்தது.
மகேந்திரா வேல்டு சிட்டியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தனியார் தொழில்நுட்ப பூங்காவில் நடந்த நிகழ்வில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநர் சீமா அகர்வால் பார்வையிட்டார்.
இதில் செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு அடுக்குமாடி குடியிருப்பில் தீ மற்றும் போது செயல்படும் முறைகள், மின்சார தீ விபத்து, எண்ணெய் தீ விபத்து, எரிவாயு மூலம் ஏற்படும் தீ விபத்துக்கள் ஏற்படும் போது எப்படி செயல்பட வேண்டும் என்ற செயல்முறை பயிற்சி அளித்தனர்.
இதில் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள், குடியிருப்பு மக்கள் பங்கேற்றனர்.

