ADDED : ஆக 24, 2026 07:13 PM
அ நிறம் | அளவு
செய்யூர், ஆக. 25–
கடலுாரில் செயல்படும் தனியார் பள்ளி மாணவ – மாணவியருக்கு தீயணைப்புத் துறையினர் சார்பில், தீவிபத்தை தடுப்பது குறித்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
செய்யூர் அடுத்த கடலுார் கிராமத்தில் சுவாமி தயானந்த ரோட்டரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது.
இந்த பள்ளியில் செய்யூர் தீயணைப்பு துறையினர் சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் தீ விபத்துகளைத் தடுப்பது, தீயை அணைக்கும் முறைகள், தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, தீயணைப்பு வீரர்கள் மாணவ – மாணவியருக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.
