sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 தீ தடுப்பு பாதுகாப்பு பயிற்சி

/

 தீ தடுப்பு பாதுகாப்பு பயிற்சி

 தீ தடுப்பு பாதுகாப்பு பயிற்சி

 தீ தடுப்பு பாதுகாப்பு பயிற்சி


ADDED : மார் 03, 2026 04:45 AM

Google News

ADDED : மார் 03, 2026 04:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், இரண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு தீ மற்றும் பாதுகாப்பு மீட்பு பணி பயிற்சி வினாடி - வினா நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு, அவசர கால மீட்பு பணி ஒத்திகை, தீ தடுப்பு பயிற்சி மற்றும் இது குறித்த போட்டி தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, மறைமலை நகர் தீயணைப்பு துறை சார்பில், நின்னகரை நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு நேற்று காலையிலும், கூடலுார் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, நேற்று மாலையிலும் இந்த பயிற்சி வகுப்பு, போட்டி தேர்வு நடத்தப்பட்டது.

இதில், 200க்கும் மேற்பட்ட மாணவ -மாணவியர் பங்கேற்றனர். பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாமல்லபுரம், கொக்கிலமேடு ஆகிய பகுதிகளில் இயங்கும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில், மாமல்லபுரம் தீயணைப்பு அலுவலர் இன்பராஜ் மற்றும் வீரர்கள், நேற்று, தீயணைப்பு விழிப்புணர்வு வகுப்பு நடத்தினர்.

தொடர்ந்து மாணவ - மாணவியரிடம், கேள்விகளுக்கு பதில் பெற்று, முதல் ஐந்து இடங்கள் வென்றவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us