ADDED : அக் 07, 2025 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:மறைமலை நகர் அருகே, கஞ்சா விற்ற வாலிபர்கள் ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.
மறைமலை நகர் அடுத்த கூடலுார் ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக, மறைமலை நகர் போலீசாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது.
அந்த இடத்திற்கு சென்ற போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஐந்து பேர் கும்பலை பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
இதில் அவர்கள், கீழக்கரணையைச் சேர்ந்த காளிதாஸ், 39, ராஜூ, 37, வினோத்குமார், 27, மறைமலை நகரைச் சேர்ந்த இளையராஜா, 42, கருநிலம் கிராமத்தைச் சேர்ந்த அனீஸ், 22, என தெரிந்தது.
இவர்களிடம் 1.5 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஐவரையும் கைது செய்து, விசாரணைக்குப் பின், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.