ADDED : ஜூலை 06, 2026 03:03 AM

அ நிறம் | அளவு
சிங்கபெருமாள் கோவில்: கருநிலம் கிராமத்தில், சீட்டு வைத்து சூதாடிய ஐந்து பேரை பிடித்த போலீசார், அவர்களிடமிருந்து 20,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
சிங்கபெருமாள் கோவில் அடுத்த கருநிலம் கிராமத்தில், நேற்று முன்தினம் மாலை, சிங்கபெருமாள் கோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கருநிலம் ஏரிக்கரை பகுதியில், சட்டவிரோதமாக சீட்டு விளையாடிய ஐந்து பேரை, போலீசார் பிடித்தனர்.
விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த நாகராஜன், 55, வினோத், 36, புண்ணியகோட்டி, 40, லோகநாதன், 40, கணேஷ், 49, என்பது தெரியவந்தது.
இவர்கள் மீது சூதாட்ட வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு பின் ஜாமினில் விடுதலை செய்தனர். அவர்களிடம் இருந்து, 20,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
