/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்காடு, பெரியார் நகர் சாலை வனத்துறையால் சீரமைப்பு தாமதம்
/
செங்காடு, பெரியார் நகர் சாலை வனத்துறையால் சீரமைப்பு தாமதம்
செங்காடு, பெரியார் நகர் சாலை வனத்துறையால் சீரமைப்பு தாமதம்
செங்காடு, பெரியார் நகர் சாலை வனத்துறையால் சீரமைப்பு தாமதம்
ADDED : ஏப் 01, 2025 12:21 AM

திருப்போரூர்,
செங்காடு மற்றும் பெரியார் நகர் செல்லும் சாலைகளை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர்- இள்ளலுார் சாலையில் இருந்து அடுத்தடுத்து செங்காடு மற்றும் பெரியார் நகர் சாலை பிரிந்து செல்கிறது.
இதில், செங்காடு சாலை, 3 கி.மீ., துாரம் உடையது. இச்சாலை, திருப்போரூர் ஒன்றிய நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ளது.
இச்சாலை வழியாக மேட்டுக்குப்பம் கிராமம், ஆஞ்சநேயர் கோவில், கோமா நகர், தையூர், காயார் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் சென்று வருகின்றனர்.
இதில், 2 கி.மீ., சாலை மேம்படுத்தப்பட்டது. ஆனால், 1 கி.மீ., சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், மேம்படுத்தப்படாமல் உள்ளது.
இதேபோல் அப்பகுதி அருகே, பெரியார் நகர் செல்லும் சாலையும் உள்ளது. இந்த சாலையும் வனப்பகுதி கட்டுப்பாட்டில் உள்ளதால், சீரமைக்கப்படாமல் கரடுமுரடாக உள்ளது.
இதன் காரணமாக, அப்பகுதிக்குச் செல்லும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இவ்வாறு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், கடந்த 20 ஆண்டுகளாக இச்சாலைகளை சீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
எனவே, விரைவில் வனத்துறை அனுமதி பெற்று, மேற்கண்ட பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.