ADDED : மார் 11, 2024 05:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டை அருகே, சீத்தஞ்சேரி - வெங்கல் மாநில நெடுஞ்சாலையில் காப்புக்காடுகள் உள்ளன. நேற்று கல்பட்டு பகுதியில் திடீரென தீ, 'மளமள'வென பரவியது.
அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், சீத்தஞ்சேரி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தேர்வாய் சிப்காட் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். அதற்குள், 10 கி.மீ., சுற்றளவிற்கு தீ பரவி மரங்கள் எரிந்து நாசமாயின.

