/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுமிக்கு பாலியல் தாக்குதல் மத்திய அரசு மாஜி ஊழியருக்கு 'ஆயுள்'
/
சிறுமிக்கு பாலியல் தாக்குதல் மத்திய அரசு மாஜி ஊழியருக்கு 'ஆயுள்'
சிறுமிக்கு பாலியல் தாக்குதல் மத்திய அரசு மாஜி ஊழியருக்கு 'ஆயுள்'
சிறுமிக்கு பாலியல் தாக்குதல் மத்திய அரசு மாஜி ஊழியருக்கு 'ஆயுள்'
ADDED : ஏப் 03, 2025 02:26 AM

செங்கல்பட்டு:சிறுமிக்கு பாலியல் தாக்குதல் செய்த மத்திய அரசு மாஜி ஊழியருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னை, சிட்லப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஐந்து வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியின் வீட்டிற்கு அருகில், மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்ற வேணுகோபால், 63, என்பவர் வசித்து வந்த நிலையில், அவர் வீட்டிற்கு சிறுமி அடிக்கடி சென்றுள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி, சிறுமி பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்த போது, வேணுகோபாலின் மனைவி, மகன் இல்லாத நேரத்தில், சிறுமிக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
2022, செப்., 8ம் தேதி, சிறுமியை தன் படுக்கை அறைக்கு வேணுகோபால் அழைத்துச் சென்ற போது, அவரிடமிருந்து தப்பி வெளியே வந்த சிறுமி, இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரையடுத்து, சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேணுகோபால், 63, என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நாசீமா பானு முன்னிலையில் நடைபெற்று வந்து. அரசு தரப்பில் வழக்கறிஞர் லட்சுமி ஆஜரானார்.
வழக்கு விசாரணை முடிந்து, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், வேணுகோபாலுக்கு ஆயுள் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்தும், அபராதம் கட்ட தவறினால் ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டும், நீதிபதி நாசீமாபானு நேற்று தீர்ப்பளித்தார்.
அதன் பின், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து, புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக, 3 லடசம் ரூபாய் தமிழக அரசு வழங்க, நீதிபதி உத்தரவிட்டார்.