/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஐ.டி., ஊழியரை தாக்கிய நான்கு பேருக்கு வலை
/
ஐ.டி., ஊழியரை தாக்கிய நான்கு பேருக்கு வலை
ADDED : ஆக 02, 2025 11:02 PM
மறைமலை நகர்:ஐ.டி. ஊழியரை தாக்கிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துார் பகுதியை சேர்ந்தவர், அபிலாஷ், 27. பெங்களூரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன் காட்டாங்கொளத்துார் வந்தார்.
நேற்று முன்தினம் இரவு தன் பல்சர் பைக்கில் காட்டாங்கொளத்துாரில் ஜி.எஸ். டி., சாலை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னே சென்ற இருசக்கர வாகனத்தில் அபிலாஷின் பைக் மோதியது. இருசக்கர வாகனத்தில் இருந்த நபர் மற்றும் அவருக்கு ஆதரவாக வந்தவர்கள் என, நால்வர் அபிலாஷை தாக்கி விட்டுச் சென்றனர். அபிலாஷ் மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.