/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பள்ளியில் மின் மோட்டார் திருடிய நால்வர் கைது
/
பள்ளியில் மின் மோட்டார் திருடிய நால்வர் கைது
ADDED : ஜூலை 29, 2025 11:29 PM
மறைமலை நகர், மறைமலை நகர் நகராட்சி, 10வது வார்டு கலிவந்தபட்டு கிராமத்தில், நகராட்சி அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இதில் படிக்கும் மாணவ - மாணவி யரின் குடிநீர் தேவைக்காக, நகராட்சி சார்பில் மின் மோட்டார் பொருத்தப்பட்டு, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம், பள்ளி வளாகத்தில் இருந்த மின் மோட்டார் மாயமானது.
இதுகுறித்து, மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில், கலிவந்தபட்டு கிராமத்தைச் சேர்ந்த செல்வம், 22, கார்த்திக், 29, தங்கபாண்டி,26, கே.கார்த்திக்,23, உள்ளிட்டோர் சேர்ந்து, மின் மோட்டார் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
இ தையடுத்து, நால்வரையும் நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து மின் மோட்டாரை பறிமுதல் செய்தனர்.