/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காப்பு காட்டில் குப்பை வீசிய நால்வருக்கு அபராதம்
/
காப்பு காட்டில் குப்பை வீசிய நால்வருக்கு அபராதம்
காப்பு காட்டில் குப்பை வீசிய நால்வருக்கு அபராதம்
காப்பு காட்டில் குப்பை வீசிய நால்வருக்கு அபராதம்
ADDED : நவ 21, 2025 03:10 AM
வண்டலுார்: செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார், கூடலுார், குமுளி, ஊனமாஞ்சேரி ஆகிய ஊராட்சிகளில், அடர்ந்த காப்புக் காடுகள் உள்ளன. காட்டின் எல்லை பகுதியில் குப்பை மற்றும் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுகின்றன.
இந்த குப்பை கழிவுகளை காப்புக்காட்டில் வசிக்கும் மான்கள் உண்டு இறப்பது, வாடிக்கையாக நிகழ்கிறது. இதையடுத்து, கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, குப்பை கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம், வனத்துறை அதிகாரிகள், காப்பு காட்டை பார்வையிட்ட போது, காரில் வந்த சிலர் அங்கு குப்பை கொட்டினர்.
அதிக அளவில் குப்பை கொட்டிய நான்கு நபர்களுக்கு, மொத்தம் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பல நபர்களை எச்சரித்து அனுப்பினர்.