/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் நான்கு ஊராட்சிகள் கற்றல் மையங்களாக தேர்வு
/
செங்கையில் நான்கு ஊராட்சிகள் கற்றல் மையங்களாக தேர்வு
செங்கையில் நான்கு ஊராட்சிகள் கற்றல் மையங்களாக தேர்வு
செங்கையில் நான்கு ஊராட்சிகள் கற்றல் மையங்களாக தேர்வு
ADDED : ஜன 27, 2024 12:21 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், நான்கு ஊராட்சிகள், ஊராட்சி கற்றல் மையமாக தேர்வு செய்யப்பட்டது. மற்ற ஊராட்சிகளை மேம்படுத்த, அதிகாரிகள், ஊராட்சி தலைவர்களுக்கு கள பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் நகராட்சி பகுதியில், மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி மையம் உள்ளது.
இதன் கீழ், மண்டல அளவிலான ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனம் செயல்படுகிறது.
இங்கு, உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு, உள்ளாட்சி நிர்வாகம் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில், 12, 525 ஊராட்சி தலைவர்களுக்கு, நிர்வாக பயிற்சி, மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக, தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஊராட்சிகளில், சுகாதாரம், சுற்றுச்சூழல், சாலை, தெருவிளக்கு, குடிநீர், மழைநீர் கால்வாய், நீர் நிலைகள் மற்றும் அரசு கட்டடங்கள், தனிநபர் கழிப்பறை, சமுதாய கழிப்பறை, திடக்கழிவு மேலாண்மை, திரவக் கழிவு மேலாண்மை ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஊராட்சிகளின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை, உள்ளூர் அளவில் செயல்படுத்துவது, ஊராட்சிகளில், வறுமை இல்லாத, வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவது இள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதை சிறப்பாக செயல்படுத்தக் கூடிய ஊராட்சிகளை, முன்மதிரி ஊராட்சிகளாக தேர்வு செய்து, ஊராட்சி கற்றல் மையமாக மாற்றி, பிற ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கில், மாநில அளவில் 10 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில், கோவளம், படூர் ஆகிய ஊராட்சிகளும், காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் மண்ணிவாக்கம் ஊராட்சியும், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில், வெள்ளபுத்துார் ஊராட்சியும் கற்றல் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என, மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன இயக்குனர் செல்வராஜன் உத்தரவிட்டார்.
இதேபோல், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் செயல்படுவதற்கு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், நான்கு ஊராட்சிகள், ஊராட்சி கற்றல் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றைப் போல, மற்ற ஊராட்சிகளிலும் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த, ஊராட்சி தலைவர்களுக்கு, இங்கு கள பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
- ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள்,
செங்கல்பட்டு மாவட்டம்.

