/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முறைகேடில் ஈடுபடுவதாக கூறி தாசில்தாருக்கு 'மோசடியாளர் விருது'
/
முறைகேடில் ஈடுபடுவதாக கூறி தாசில்தாருக்கு 'மோசடியாளர் விருது'
முறைகேடில் ஈடுபடுவதாக கூறி தாசில்தாருக்கு 'மோசடியாளர் விருது'
முறைகேடில் ஈடுபடுவதாக கூறி தாசில்தாருக்கு 'மோசடியாளர் விருது'
ADDED : டிச 16, 2025 05:51 AM

வண்டலுார்: வண்டலுார் தாசில்தார், துணை தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் மு றைகேடுகளில் ஈடுபடுவதாகக் கூறி, வண்டலுார் தாசில்தார் அலுவலகம் முன், மக்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில், நேற்று கவன ஈர்ப்பு கூட்டம் நடந்தது.
இது குறித்து, மக்களுக்கான மக்கள் இயக்கம் பொது செயலர் கார்த்திக் கண்ணன், 40, கூறியதாவது:
வண்டலுார் தாலுகா அலுவலகத்தி ல் வட்டாட்சியர் பூங்கொடி, துணை வட்டாட்சியர், சர்வேயர் உள்ளிட்ட சிலர், மோசடியான ஆவணங்களுக்கு பட்டா வழங்கி வருகின்றனர்.
தகவல் அறியும் உரிமை சட்ட மனுக்களுக்கு, பதில் கூறுவதில்லை. இதனால், தாசில்தார் பூங்கொடி, சர்வேயர் சுரேஷ் உள்ளிட்டோரின் முறைகேடு பணிகளைப் பாராட்டி, அவர்களுக்கு 'சிறந்த மோசடியாளர்' விருதும், சான்றிதழும் வழங்க முற்பட்டோம்.
இதை அறிந்து கொண்ட அவர்கள், அலுவலகத்திலிருந்து வெளியேறி விட்டனர்.
மக்கள் விரோத செயல்பாடுகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு இதுபோல், 'சிறந்த மோசடியாளர்' விருது வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.