/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விலையில்லா சைக்கிள் வினியோகம்
/
விலையில்லா சைக்கிள் வினியோகம்
ADDED : நவ 21, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் கல்வி வட்டாரத்திற்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ - மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி, வழங்கப்பட்டது.
அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் வேடந்தாங்கல், எல்.எண்டத்துார், எலப்பாக்கம், அனந்தமங்கலம், ஒரத்தி, தொழுப்பேடு மற்றும் அச்சிறுபாக்கம் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் - 2 வகுப்பு பயிலும், 800க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு, நேற்று விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

