/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு செங்கையில் இலவச பயிற்சி
/
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு செங்கையில் இலவச பயிற்சி
ADDED : ஆக 03, 2025 12:32 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் வளாகத்தில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு இலவச பயிற்சி நாளை துவங்குகிறது.
இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக, பல்வேறு அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
டி.என்.பி.எஸ்.சி., தேர்விற்கு தயாராகும், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த போட்டி தேர்வாளர்கள் பயனடையும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில், இலவச பயிற்சி நாளை துவங்குகிறது.
திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பயிற்சி நடைபெறும். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள போட்டி தேர்வாளர்கள், தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொள்ளலாம். 044 - 27426020 - 94868 70577 - 93844 99848 ஆகிய எண்களை தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.