/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வண்டலுாரில் இலவச மருத்துவ முகாம்
/
வண்டலுாரில் இலவச மருத்துவ முகாம்
ADDED : ஜூன் 06, 2025 09:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வண்டலுார்:வண்டலுாரில், இலவச பொது மற்றும் கண் பார்வை பரிசோதனை மருத்துவ முகாம், நாளை நடக்கிறது.
தாம்பரத்தில் இயங்கி வரும் நிர்மல் கண் மருத்துவமனை மற்றும் படப்பையில் இயங்கி வரும் சாயி பொது மருத்துவமனை இணைந்து, வண்டலுாரில் நாளை, இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாமை நடத்துகின்றன.
வண்டலுார், ஓட்டேரி விரிவு பகுதி, 5வது தெரு, தாமஸ் இல்லத்தில், காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை இந்த இலவச முகாம் நடக்கிறது.
இதில், பொது மருத்துவ பிரிவில் ரத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளும், கண் பார்வை குறைபாடு தொடர்புடைய பரிசோதனைகளுடன், மருத்துவர்களின் ஆலோசனையும் வழங்கப்படும்.