/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பங்காரு அடிகளார் பிறந்தநாள் 6 ஜோடிக்கு இலவச திருமணம்
/
பங்காரு அடிகளார் பிறந்தநாள் 6 ஜோடிக்கு இலவச திருமணம்
பங்காரு அடிகளார் பிறந்தநாள் 6 ஜோடிக்கு இலவச திருமணம்
பங்காரு அடிகளார் பிறந்தநாள் 6 ஜோடிக்கு இலவச திருமணம்
ADDED : ஜூலை 17, 2025 01:31 AM

திருக்கழுக்குன்றம்:ஆதிபராசக்தி சித்தர்பீட பங்காரு அடிகளார் 85வது பிறந்தநாள் விழாவையொட்டி நடந்த இலவச திருமணங்களை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் செந்தில்குமார், நடத்தி வைத்தார்.
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க, செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், ஆதிபராசக்தி சித்தர் பீட பங்காரு அடிகளார் 85வது பிறந்தநாள் விழாவையொட்டி, இலவச திருமணங்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திருக்கழுக்குன்றம் கன்னிமுத்து திருமண மண்டபத்தில், நேற்று நடந்தது.
ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் கோ.ப.செந்தில்குமார் பங்கேற்று, ஆறு தம்பதியருக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைத்தார்.
மேலும், மூன்று சக்கர வண்டிகள், தையல் இயந்திரங்கள், சலவை பெட்டிகள் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என, மொத்தம் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
செங்கல்பட்டு நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் தனசீலன், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் மற்றும் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க, செங்கல்பட்டு மாவட்ட பொருளாளர் மன்மதன், முன்னாள் மாவட்ட தலைவர் கொண்டரெட்டியார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில், ஏராளமான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க, செங்கல்பட்டு மாவட்ட தலைவர் வேலு தலைமையில், மாவட்ட பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

