தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மெய்யூர் - பழவேலி தடுப்பணை கட்டும் திட்டம் முடக்கம்! மழைநீர் கடலில் கலந்து வீணாவதாக குற்றச்சாட்டு

மெய்யூர் - பழவேலி தடுப்பணை கட்டும் திட்டம் முடக்கம்! மழைநீர் கடலில் கலந்து வீணாவதாக குற்றச்சாட்டு

மெய்யூர் - பழவேலி தடுப்பணை கட்டும் திட்டம் முடக்கம்! மழைநீர் கடலில் கலந்து வீணாவதாக குற்றச்சாட்டு


UPDATED : செப் 28, 2026 09:59 PM

ADDED : செப் 28, 2026 09:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2026 09:59 PM ADDED : செப் 28, 2026 09:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு:மெய்யூர் - பழவேலி இடையே பாலாற்றில் தடுப்பணை கட்ட, 55 கோடி ரூபாய் நிதி கேட்டு

நீர்வளத்துறை சார்பில் தமிழக அரசுக்கு நிர்வாக கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளாகியும் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளதால், மழைநீர் கடலில் கலந்து வீணாவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நீர்வளத்துறையின் பரிந்துரைகளை துாசி தட்டி, த.வெ.க., அரசு நடவடிக்கை வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் இருந்து, ஆந்திரா வழியாக தமிழகத்திற்குள் நுழையும் பாலாறு, வேலுார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வழியாக பாய்ந்து, வாயலுார் அருகே வங்கக் கடலில் கலக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், பாலாற்றுப்படுகை, விவசாயத்திற்கு மட்டும் இன்றி, சென்னை, பல்லாவரம், மறைமலை நகர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடிநீர் ஆதரமாகவும் உள்ளது.

தவிர, கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் வாயிலாக, சிதண்டிமண்டபம், மெய்யூர், மாமண்டூர், பழவேலி, பழமத்துார், உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

ஊராட்சி பகுதிகளுக்கு ஆழ்துளை கிணறு மற்றும் கிணறுகள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. செங்கல்பட்டு நகராட்சியில் 33 வார்டுகள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், செங்கல்பட்டு அடுத்த பாலுார் பாலாற்றில் 2013-14ம் ஆண்டில், நீர் செறிவூட்டும் தரைமட்ட தடுப்பணை கட்டப்பட்டது.

இதனால், பாலுார், வில்லியம்பாக்கம், சாத்தனஞ்சேரி, சீத்தனஞ்சேரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், நெற்பயிர் சாகுபடி நடக்கிறது.

நிலத்தடி நீர்

அதைதொடர்ந்து, மாவட்டத்தில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 2019ம் ஆண்டு, கல்பாக்கம் அடுத்த, வாயலுார், திருக்கழுக்குன்றம் அடுத்த, வல்லிபுரம் - ஈசூர் இடையே தலா ஒரு தடுப்பணை, நீர்வளத்துறை சார்பில் கட்டப்பட்டது.

இதனால், வடகிழக்கு பருவ மழைநீர் தேக்கி வைக்கப்பட்டு, விவசாயிகள் பயன்பெறுகின்றனர். தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கியதால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, ஆழ்துளை கிணறு மற்றும் கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

அதன்பின், பாலாற்றில் தடுப்பணைகள் கட்டாததால், மழைக்காலங்களில் சேகரமாகும் தண்ணீர் கடலில் கலக்கிறது.

வடகிழக்கு பருவமழைக்காலத்தில், பெருக்கெடுக்கும் வெள்ளம் கடலில் கலக்கிறது.

அதன்பின், கடந்த தி.மு.க., ஆட்சியில், பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்காமல் விட்டதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மாவட்டத்தில், பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என, மாவட்ட விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம் மற்றும் அரசிடம், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, மதுராந்தகம், மெய்யூர் - பழவேலி இடையே 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாலாற்றில் தடுப்பணை கட்ட தமிழக அரசுக்கு நீர்வளத்துறையினர் கருத்துரு அனுப்பி வைத்தனர். முந்தைய தி.மு.க., அரசு கிடப்பில் நிதி ஒதுக்கீடு செய்யமால் கிடப்பில் போட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி, புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க., அரசு தடுப்பணை கட்ட, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மெய்யூர் பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். தடுப்பணை கட்டினால், விவசாயம் மற்றும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். க. கன்னியப்பன் விவசாயி மெய்யூர்.


மெய்யூர் - பழவேலி இடையே பாலாற்றில் தடுப்பணை கட்ட 55 கோடி ரூபாய் நிதி கேட்டு, அரசுக்கு நிர்வாக அறிக்கை அனுப்பி உள்ளோம். அரசு நிதி ஒதுக்கிய பிறகு, தடுப்பணை கட்டப்படும். நீர்வளத்துறை அதிகாரிகள் மதுராந்தகம்.


நீர்வளம் மேம்படும் மெய்யூர் - பழவேலி இடையே பாலாற்றில் தடுப்பணை கட்டினால், 195.20 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெறும். செங்கல்பட்டு நகராட்சி மற்றும் மெய்யூர், சிதண்டிமண்டபம், மாமண்டூர், பழவேலி, பழமத்துார் ஆகிய ஊரட்சிகள். சுற்றுவட்டார கிராமங்களின் நிலத்தடி நீர்வளம் மேம்படும். 80 திறந்தவெளி கிணறுகள் மற்றும் 150 ஆழ்த்துளை கிணறுகள் நிலத்தடி நீர் செறிவூட்டம் பெறும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us