/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வண்டலுாரில் அடிக்கடி மின்தடை பிரச்னை துணை மின்நிலையம் அமைக்க எதிர்பார்ப்பு

ADDED : மே 09, 2025 02:13 AM
வண்டலுார்:வண்டலுாரில், குறைந்த மின்னழுத்தம் காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதைப் போக்க, வண்டலுாரில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சியில், 232 தெருக்களில், 2,047 மின்கம்பங்கள் உள்ளன.
இங்கு, புதிய வீடுகள் மற்றும் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் தொடர்ந்து கட்டப்பட்டு, அவற்றில் குடியேறுவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.
இதனால், மின் நுகர்வும் தொடர்ந்து அதிகரிக்கிறது.
தற்போது கோடைக்காலம் என்பதால், பல குடும்பத்தார் புதிதாக 'ஏசி' வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால், மின்சார பயன்பாடு உச்சத்தை எட்டி, அடிக்கடி குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு, ஒரு நாளில் ஐந்து முறை மின் தடை ஏற்படுகிறது.
இரவு நேரத்தில் ஏற்படும் மின்தடையால் குழந்தைகள், முதியோர், உடல் நலம் குன்றியோர் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
குறைந்த மின்னழுத்தம் காரணமாக அடிக்கடி ஏற்படும் மின்தடையால், வீட்டு உபயோக மின்னணு பொருட்கள் பழுதாகி, பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.
எனவே, வண்டலுாரில் ஏற்படும் மின்னழுத்த குளறுபடிகளை நிவர்த்தி செய்ய, இப்பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.