ADDED : ஜூலை 07, 2026 10:51 PM
அ நிறம் | அளவு
சித்தாமூர்: வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு ஐந்து ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகமல் இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் இவர் கடந்த 2006ம் ஆண்டு சித்தாமூர் பகுதியில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதால் சித்தாமூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளியே வந்து, கடந்த 5 ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகினார்.
தஞ்சாவூரில் தலைமறைவாக இருந்த ஆறுமுகத்தை சித்தாமூர் போலீசார் கைது செய்தனர்.
