/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை முருகர் கோவில்களில் கந்தசஷ்டி
/
செங்கை முருகர் கோவில்களில் கந்தசஷ்டி
ADDED : நவ 05, 2024 11:40 PM

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழா, கடந்த 2ம் தேதி துவங்கியது. வரும் 7ம் தேதி சூரசம்ஹாரம், 8ம் தேதி திருக்கல்யாண வைபவத்துடன் விழா நிறைவடைகிறது.
இந்த கந்தசஷ்டி விழாவையொட்டி, கோவில் சொற்பொழிவு மண்டபத்தில், நேற்று முன்தினம் இரவு வளர்கலை நாட்டியாலயா சார்பில், பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், 40 மாணவியர் பங்கேற்று, பக்தி பாடலுக்கு ஏற்றவாறு பரதநாட்டியம் ஆடி அசத்தினர்.
கூடுவாஞ்சேரி மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமி சன்னிதியில், சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், நேற்று நான்காம் நாள் சிறப்பு பூஜையில், சுப்பிரமணிய சுவாமிக்கு பல விதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அச்சிறுபாக்கம் அருகே பெரும்பேர் கண்டிகை மலை மீது அருள்பாலிக்கும் வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமிக்கு, ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது.
கந்த சஷ்டி விழாவில், நான்காவது நாள் நிகழ்வாக, புஷ்ப அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

