/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேம்பாலம் கீழே குப்பை எரிப்பு வாகன ஓட்டிகள் திணறல்
/
மேம்பாலம் கீழே குப்பை எரிப்பு வாகன ஓட்டிகள் திணறல்
மேம்பாலம் கீழே குப்பை எரிப்பு வாகன ஓட்டிகள் திணறல்
மேம்பாலம் கீழே குப்பை எரிப்பு வாகன ஓட்டிகள் திணறல்
ADDED : மே 17, 2025 02:02 AM

மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில் -- ஒரகடம் நெடுஞ்சாலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நெடுஞ்சாலையில், சிங்கபெருமாள் கோவில் ரயில்வே மேம்பாலத்தின் கீழே, காலி இடம் உள்ளது.
கடந்த சில நாட்களாக, வெளியில் இருந்து லாரிகளில் குப்பை கொண்டுவரப்பட்டு, இங்கு கொட்டி எரிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
தினமும் இங்கு, தனியார் தொழிற்சாலைகளின் குப்பை, பிளாஸ்டிக் குப்பை உள்ளிட்டவை கொட்டி எரிக்கப்படுவதால், இந்த பகுதியே புகை மூட்டமாக காணப்படுகிறது.
கண் எரிச்சல், கண்களில் துாசி விழுதல், சுவாச பிரச்னைகளால், இவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
புகை சூழ்ந்து உள்ளதால், வாகனங்கள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது.
மறைமலை நகரை பொறுத்தவரை, பல இடங்களில் இதுபோன்று குப்பை எரிக்கப்படுகிறது. மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் மறைமலை நகரில் இருந்தும், அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.