/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குப்பை சேகரிக்கும் வண்டிகள் வீண்
/
குப்பை சேகரிக்கும் வண்டிகள் வீண்
ADDED : நவ 20, 2025 03:59 AM

மதுராந்தகம்: அண்டவாக்கம் ஊராட்சியில் வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும் வண்டிகள், பழுது காரணமாக நிறுத்தப்பட்டதால், மக்கி வீணாகி வருகின்றன.
மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்டு அண்டவாக்கம் ஊராட்சி உள்ளது.
இங்கு, மதுராந்தகம் - உத்திரமேரூர் மாநில நெடுஞ்சாலை ஓரம் அண்டவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி அலுவலக கட்டடம் மற்றும் இ --- சேவை மைய கட்டடம் உள்ளது.
இங்கு, அண்டவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள் தோறும் குப்பை சேகரிக்க, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின், ஊரக வளர்ச்சி முகமையின் மூலமாக, மூன்று சக்கர ட்ரை சைக்கிள் மற்றும் தள்ளு வண்டிகள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டது.
நாளடைவில், சைக்கிள் டயர் பஞ்சர் மற்றும் உரிய பராமரிப்பு இன்றி போனதால், அவை ஊராட்சி அலுவலக கட்டடம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டது.
அவை, தற்போது மக்கி வீணாகி வருகிறது.எனவே, பயன்பாட்டின்றி உள்ள குப்பை சேகரிக்கும் ட்ரை சைக்கிள்களை, பொது ஏலம் அறிவித்து, அந்தத் தொகையை ஊராட்சிக்கு பயன்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

