/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சோத்துப்பாக்கத்தில் குப்பை அகற்றம்
/
சோத்துப்பாக்கத்தில் குப்பை அகற்றம்
ADDED : பிப் 20, 2025 11:52 PM

மேல்மருவத்துார், சோத்துப்பாக்கத்தில் பேருந்து நிறுத்தம் அருகே குவிக்கப்பட்டிருந்த குப்பையை துாய்மை பணியாளர்கள் அகற்றினர்.
சோத்துப்பாக்கம் பகுதியில் திண்டிவனத்தில் இருந்து செங்கல்பட்டு வழியாக செல்லும் பேருந்துகள் வந்தவாசி, வேலுார் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், சோத்துப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்கின்றன.
நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், இப்பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்று பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.
பேருந்து நிறுத்தும் அருகே சாலை பகுதியிலேயே ஹோட்டல் உணவு கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பையை வீசுவது அதிகரித்து வருகிறது. அதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
எனவே, பேருந்து நிறுத்தம் பகுதியில் குப்பை நிறைந்துள்ளதால், அவற்றை அகற்ற ஊராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, நேற்று அப்பகுதியில் இருந்த குப்பையை, பொக்லைன் வாகனம் வாயிலாக துாய்மை பணியாளர்கள் அகற்றினர்.
பின், மீண்டும் அப்பகுதியில், குப்பை கொட்டாதவாறு, ஊராட்சி நிர்வாகத்தின் வாயிலாக, அங்குள்ள கடைகளுக்கு உத்தரவிட்டும், மீறினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

