தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குப்பை கொட்டிய லாரி சிறைபிடிப்பு

 குப்பை கொட்டிய லாரி சிறைபிடிப்பு

 குப்பை கொட்டிய லாரி சிறைபிடிப்பு


ADDED : நவ 29, 2025 04:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 04:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சித்தாமூர்: கூழமங்கலம் கிராமத்தில், தனிநபருக்கு சொந்தமான இடத்தில் குப்பை கொட்டிய லாரியை, கிராம மக்கள் சிறைபிடித்தனர்.

சித்தாமூர் அடுத்த நேத்தப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கூழமங்கலம் கிராமத்தில், மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலை ஓரத்தில், தனி நபருக்குச் சொந்தமான இடத்தில், லாரியில் குப்பை கொண்டு வந்து கொட்டி உள்ளனர்.

தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த கூழமங்கலம் கிராம ம க்கள், குப்பை கழிவு கொட்டிய லாரியை சிறைபிடித்தனர்.

பின், சம்பவ இடத்திற்கு வந்த சித்தாமூர் போலீசார் விசாரித்ததில், திண்டிவனம் பகுதியில் இருந்து லாரிகளில் கழிவுகளை ஏற்றிவந்து கொட்டியது தெரிந்தது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, 'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக கழிவுகள் மீண்டும் லாரியில் ஏற்றப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டன.

அங்கு இருந்து சென்ற லாரி, சரவம்பாக்கம் பகுதியில் கொட்ட முயற்சித்த போது, பொதுமக்கள் லாரியை திருப்பி அனுப்பி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us