தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குப்பை கொட்டப்படுவதால் பாலாற்றில் சுகாதார சீர்கேடு

 குப்பை கொட்டப்படுவதால் பாலாற்றில் சுகாதார சீர்கேடு

 குப்பை கொட்டப்படுவதால் பாலாற்றில் சுகாதார சீர்கேடு


ADDED : ஏப் 03, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 04:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியம்பாக்கம்:பாலாற்றில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதை தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பழத்தோட்டம் பகுதியில் பாலாற்று நடுவே திம்மாவரம் பழத்தோட்டம் -ஒரக்காட்பேட்டை செல்லும் மேம்பாலம் 2017ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த மேம்பாலம் வழியாக ஒரக்காட்பேட்டை, மாம்பாக்கம், சாலவாக்கம், காவாந்தண்டலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மேம்பாலம் காஞ்சிபுரம் --- செங்கல்பட்டு மாவட்டத்தை இணைக்கும் பாலமாக உள்ளது. இந்த பாலம் வழியாக செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அடிப்படை தேவைகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்த மேம்பாலத்தின் முகப்பு பகுதி மற்றும் பாலாற்றில் திம்மாவரம், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பை தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் துர்நாற்றம் வீசி பாலாற்றில் நிலத்தடிநீர் பாதிப்படையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இங்கு குப்பை கொட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us