ADDED : ஏப் 11, 2026 05:22 PM

அச்சிறுபாக்கம்:பள்ளிப்பேட்டை ஊராட்சியில், கழிவு நீர் கால்வாயில் குப்பை கழிவுகள் நிறைந்துள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
அச்சிறுபாக்கம் அருகே பள்ளிப்பேட்டை ஊராட்சி, பிள்ளையார் கோவில் தெருவின் பின்புறம் செல்லும் கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் குப்பை மற்றும் ஹோட்டல் உணவு கழிவுகள் குவிந்துள்ளதால், கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி உள்ளது.
கழிவு நீர் கால்வாயில், வீடுகளில் இருந்து வீசப்படும் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகள், சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள் காற்றில் பறந்து, அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் விழுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
எனவே, கழிவுநீர் கால்வாயில் உள்ள குப்பை கழிவுகளை அகற்ற, ஊராட்சி நிர்வாகம் மற்றும் அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
