/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையோரம் குப்பை குவிப்பு ஊரப்பாக்கத்தில் சீர்கேடு
/
சாலையோரம் குப்பை குவிப்பு ஊரப்பாக்கத்தில் சீர்கேடு
சாலையோரம் குப்பை குவிப்பு ஊரப்பாக்கத்தில் சீர்கேடு
சாலையோரம் குப்பை குவிப்பு ஊரப்பாக்கத்தில் சீர்கேடு
ADDED : ஜன 08, 2025 12:22 AM

காட்டாங்கொளத்துார்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி, ரேவதிபுரம் பிரதான சாலையின் ஓரமாக குப்பை அதிக அளவில் தேங்கி உள்ளது. இங்கு கொட்டப்படும் குப்பையை, ஊராட்சி நிர்வாகம் அகற்றி வருகிறது. ஆனால், குப்பை அகற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே, அங்கு மீண்டும் குப்பை அதிக அளவில் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
சாலையோரம் கடைகள் வைத்திருப்போர், கடைகளில் சேகரமாகும் குப்பையை இங்கு கொண்டுவந்து கொட்டுகின்றனர்.
இதனால், இப்பகுதியில் கால்நடைகள் குவிந்து, குப்பையை சாலையில் இழுத்துப் போடுகின்றன.
அதிக அளவில் மாடுகள் குப்பை அருகே குவிவதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. சில நேரம், மாடுகள் மீது மோதி சிறு சிறு விபத்துக்களில் சிக்குகின்றனர்.
எனவே இப்பகுதியில் குப்பை கொட்டாதவாறு, ஊராட்சி சார்பில் வீடுகள்தோறும் சென்று குப்பையை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் குப்பை கொட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.