/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையோரம் குவியும் குப்பை மதுராந்தகத்தில் சுகாதார சீர்கேடு
/
சாலையோரம் குவியும் குப்பை மதுராந்தகத்தில் சுகாதார சீர்கேடு
சாலையோரம் குவியும் குப்பை மதுராந்தகத்தில் சுகாதார சீர்கேடு
சாலையோரம் குவியும் குப்பை மதுராந்தகத்தில் சுகாதார சீர்கேடு
ADDED : ஜூன் 20, 2025 02:28 AM

மதுராந்தகம்:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மதுராந்தகம் நகர் பகுதிக்குச் செல்லும் புறவழிச் சாலையோரம் கோழி இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள், காய்கறி கழிவுகள் மற்றும் உணவகங்களின் கழிவுகள் கொட்டப்படுவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.
மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து, புறவழிச் சாலை வழியாக திண்டிவனம் மார்க்கமாகவும், செங்கல்பட்டு மார்க்கத்திலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மதுராந்தகம் நகர் பகுதிக்குச் செல்லும் புறவழிச் சாலையோரம் கோழி இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள், காய்கறி கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்படுவதால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று அபாயமும் நீடிக்கிறது.
இதனால், அந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பேருந்தில் பயணம் செய்யும் பயணியர், மிகுந்த அவதியடைகின்றனர்.
மூச்சுத்திணறல், கண் எரிச்சல், குமட்டல், வாந்தி போன்றவையும் ஏற்படுவதால், செய்வதறியாமல் தவிக்கின்றனர்.
மேலும், அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
மேலும், சாலையை ஆக்கிரமித்து, கழிவுநீர் வாகனங்களும் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கையாக, அப்பகுதியில் உள்ள 10 டன் அளவுக்கும் அதிகமான குப்பையை அகற்றி, 'பிளீச்சிங் பவுடர்' துாவ வேண்டும். அத்துடன் அங்கு, மரக்கன்றுகள் நட்டு, பராமரிக்க வேண்டும்.
- சமூக ஆர்வலர்கள்